“லியோ” லோகேஷ் கனகராஜை வச்சி செய்த விஜய்யின் தந்தை… என்ன சொல்லிட்டார் தெரியுமா?

“லியோ” லோகேஷ் கனகராஜை வச்சி செய்த விஜய்யின் தந்தை… என்ன சொல்லிட்டார் தெரியுமா?
  • PublishedJanuary 28, 2024

திரையுலகில் மூத்த இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் ஒரு படத்தின் விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சி இளம் தலைமுறை இயக்குனர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

இதில் “நான் ஒரு இயக்குனருக்கு அழைப்பு செய்து செய்து பேசினேன். அப்போது அவருடைய படத்தின் முதல் பாதி சூப்பராக இருக்கும் அருமையாக இருக்கு என கூறினேன். அப்போது அவர் என்னிடம் நன்றாக பேசி கொண்டு இருந்தார். இரண்டாம் பாதி சற்று சரியாக இல்லை அதை சரி செய்யலாமே.

நீங்கள் படத்தில் காட்டிய மதத்தில் அப்படிப்பட்ட மூடநம்பிக்கை எல்லாம் ஒன்றுமே இல்லை. தந்தையே தனது பிள்ளையை பலி கொடுப்பது போல் காட்டியுள்ளீர்கள். அப்படியெல்லாம் அந்த மதத்தில் இல்லை என கூறும் போது, சார் நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என கூறிவிட்டு போன் அழைப்பை துண்டித்து விட்டார்.

அந்த படம் வெளிவருவதற்கு 5 நாட்களுக்கு முன்பே அப்படத்தை பார்த்து விட்டேன். அதன்பின் நான் கூறியதை வைத்து படத்தில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம்.

ஆனால், நான் சொன்னதை அந்த இயக்குனர் ஏற்றுக் கொள்ளவில்லை. படம் வெளிவந்த பின் அனைவரும் அப்படத்தை வெச்சு செய்தார்கள்” என பேசினார்.

எஸ்.ஏ.சி-யின் இந்த பேச்சு இயக்குனர் லோகேஷ் கனகராஜை பற்றி தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்.

ஏனென்றால் அவருடைய லியோ படத்தில் தான் தந்தை, மகளை பலி கொடுப்பது போல் காட்சி இருந்தது. மேலும் படம் வெளிவருவதற்கு 5 நாட்களுக்கு முன்பே படத்தை பார்த்துவிட்டு இரண்டாம் பாதி சரியில்லை என எஸ்.ஏ.சி கூறினாராம்.

அதே போல் லியோ படம் வெளிவந்தபின் அப்படத்திற்கு அனைவரும் கூறிய அதிகபட்ச விமர்சனம் இரண்டாம் பாதி சரியில்லை, தொய்வாக இருக்கிறார் என்பது தான். தனது மகன் படமாக இருந்தாலும் கூட எஸ்.ஏ.சி வெளிப்படையாக கூறிய இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாகவே விஜய்க்கும், அவரது அம்மா, அப்பா, மனைவி மற்றும் பிள்ளைகள் என அனைவருடனும் உறவு சரியா இல்லை என்று வதந்திகள் பரவி வந்தன.

இந்த நிலையில், இதை உண்மையாக்கும் வகையில் தற்போது எஸ்.ஏ.சியின் கருத்து வெளிவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *