விஜய்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் திடீர் மாற்றம்… தளபதி 69 சுடச்சுட அப்டேட்

விஜய்-கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் திடீர் மாற்றம்… தளபதி 69 சுடச்சுட அப்டேட்
  • PublishedJanuary 28, 2024

விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு தற்போது பவதாரிணி மறைவு காரணமாக பிரேக் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய்யின் தளபதி 69 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இக்கூட்டணியில் திடீரென மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 69 படத்தை கேங்ஸ்டர் ஜானரில் எடுக்க கார்த்திக் சுப்புராஜ் பிளான் செய்துள்ளாராம். மேலும் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின் படி, தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதன்படி தளபதி 69 வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களாகவே விஜய்யிடம் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கால்ஷீட் கேட்டு வந்தது. இதனால் தான் தளபதி 69 படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் பேனரில் எடுக்க விஜய் முடிவு செய்துள்ளாராம்.

இன்னொரு பக்கம் சன் பிக்சர்ஸில் பட்ஜெட் விஷயத்தில் அதிக தலையீடு இருக்கும் என்பதாலும் விஜய் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வேல்ஸ் பிலிம்ஸ் பட்ஜெட் பற்றி எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறி விஜய்யின் கால்ஷீட்டை வாங்கியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *