Biopic படத்திற்கு பேரை தேர்வு செய்த சாய்…என்ன தெரியுமா?

சிறந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சாய் பல்லவி தனது வாழ்க்கை வரலாறு படத்திற்கு என்ன தலைப்பு வைக்கவேண்டும் என்பது குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. தமிழில் தியா எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் மாரி 2 படத்தில் நடித்தார். ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களை விட கார்கி படம் நல்ல வரவேற்பை ஏற்படுகிறது.
மேலும் கடந்த ஆண்டு அமரன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலகளவில் ரூ. 340 கோடி வசூல் செய்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா படத்தில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் உங்கள் Biopic படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என சாய் பல்லவியிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த சாய் பல்லவி “என்னுடைய Biopic ரெடி பண்ணிட்டு அதற்கு பெயர் வைக்க சொன்னாங்க என்றால், கண்டிப்பா அதற்கு ’50 SHADES OF PALLAVI’ என்றுதான் வைப்பேன். ஏனென்றால், ஒவ்வொருத்தர் கூடவும் நம்ம எல்லாரும் வேற வேற மாதிரி இருப்போம்ல, நானும் அதே மாதிரி தான்.
பிரண்ட்ஸ் கூட இருக்கும்போது ஒரு மாதிரி இருப்பேன். அதுவே இண்டஸ்ட்ரில, செட்டில, வேற மாதிரி இருப்பேன். அப்பா அம்மா கூட வேற மாதிரி இருப்பேன். அதனால் ’50 SHADES OF PALLAVI’ என்ற பெயர் சரியானதாக இருக்கும்” என கூறியுள்ளார்.