அகில்-ஜைனப் இருவரின் வயது வித்தியாசம்… எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர் நாகர்ஜுனா, இவர் தமிழில் தனுஷின் குபேரா படத்தில் அண்மையில் நடித்துள்ளார்.இந்த நிலையில் தான் நாகர்ஜுனா வீட்டில் திருமண கொண்டாட்டம் நடந்துள்ளது.
நாகர்ஜுனா-அமலாவின் மகன் அகில் அக்கினேனிக்கும் அவரது நீண்டகால காதலி ஜைனப் ராவ்ட்ஜி என்பவருக்கு கடந்த ஜுன் 6ம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்தது. அதன்பின் கடந்த ஜுன் 8ம் தேதி இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
எந்த ஒரு பிரபலங்களின் திருமணம் நடந்தாலும் அவர்களின் வயது வித்தியாசம் குறித்த தகவல் வந்துவிடுகிறது.
அப்படி சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட அகில்-ஜைனப் இருவரின் திருமண வயது குறித்து தகவல் வந்துள்ளது. இருவரும் 9 வயது வித்தியாசம் உள்ளதாம், அகிலுக்கு 30 வயது, ஜைனப்பிற்கு 39 வயது ஆகிறதாம்