தனது அம்மா சரிகா குறித்து பேசிய ஸ்ருதி

தனது அம்மா சரிகா குறித்து பேசிய ஸ்ருதி
  • PublishedJune 9, 2025

நடிகர் கமல் ஹாசன் – நடிகை சரிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹசான் என்ற இரு மகள் உள்ளனர். இவர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் தனது பெற்றோர்களின் விவாகரத்து குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

தாய் – தந்தை பிரிவு குறித்து பேசிய ஸ்ருதி, “தாய் – தந்தையின் பிரிவு எனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தை கற்று தந்தது. குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது” என்று அவர் கூறியுள்ளார்.

“தனது அம்மா சரிகா குறித்து பேசிய ஸ்ருதி, “என் அம்மா சரிகா விவாகரத்துக்கு பின் தன்னம்பிக்கையுடன், தைரியமாக நின்று தனது வாழ்க்கையை மருவடிவமைத்த விதம் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. இந்த சம்பவம் ஒரு பெண் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு பெற்றிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியது. அது என் வாழ்க்கையின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக மாறியது” என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *