சலார் படம் எப்படி இருக்கு… பார்த்தவர்கள் கூறுவது என்ன?

சலார் படம் எப்படி இருக்கு… பார்த்தவர்கள் கூறுவது என்ன?
  • PublishedDecember 22, 2023

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இணைந்து நடித்து இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் சலார். தெலங்கானாவில் நள்ளிரவு 1 மணிக்கு காட்சி வெளியானது. உலகின் பல இடங்களில் 4 மணி முதல் சலார் ஓடி வருகிறது.

இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், ஸ்ரியா ரெட்டி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இன்று உலகளவில் வெளிவந்துள்ள இப்படத்தின் ரசிகர்களின் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, ஸ்பெஷல் ஷோ பார்த்த ரசிகர்கள் பலரும் கூறிய விமர்சனத்தில், ‘ப்ளாக் பஸ்டர் திரைப்படம். பிரபாஸ் நடிப்பு வேற லெவல். அதே போல் பிரித்விராஜ் நடிப்பும் பட்டையை கிளப்புகிறது.

இயக்குனர் பிரஷாந்த் நீலின் இயக்கம் சூப்பர். தி பெஸ்ட், பிரபாஸின் மாஸ் கம் பேக். சண்டை காட்சிகள் அனைத்துமே வெறித்தனமாக இருக்கிறது. இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறோம்’ என எக்ஸ் தளத்தில் தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.

ஒரு பக்கம் இப்படத்திற்கு நல்ல விமர்சங்கள் கிடைத்து வந்த நிலையில் பற்றொரு புறம் இப்படம் நன்றாக இல்லை, என கூறியும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. இதில் ‘சலார் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. எமோஷனல் கனெக்ட் இல்லை. இடைவேளை காட்சி நன்றாக இருக்கிறது. ஆனால், படம் நன்றாக இல்லை’ என கூறியுள்ளனர்.

இந்த படத்தை பார்க்கும் போது தென்னிந்தியாவில் திருவிழா என்றே தெரிகிறது. பாவம் ஷாருக்கான் ரசிகர்கள் டங்கியை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்ய முடியாது. டைனோசரஸ் அவ்வளவு வெறித்தனமாக வந்திருக்கிறது என இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

நான் என்டிஆர் ரசிகன் தான். ஆனால், பிரபாஸ் சலார் படத்தில் தெறிக்க விட்டு இருக்கிறார். சாலா பாகுந்தி என இந்த ரசிகர் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார். பூஸ்தபிதாம்.. நிலாமட்டம் என இன்னொரு ரசிகர் பப்ளிக் ரிவ்யூவில் பிரபாஸ் படத்தைக் கொண்டாடி தீர்த்துள்ளார். கேஜிஎஃப் பட இயக்குநர் பிரபாஸ் ரசிகர்களை கொஞ்சமும் ஏமாற்றவில்லை என்றே தெரிகிறது.

தொடர்ந்து ஹாட்ரிக் டிசாஸ்டர் படங்களை கொடுத்த பிரபாஸ் பல தோல்விகளுக்குப் பிறகு வெற்றி பெற்றிருப்பது சந்தோஷம் என பவன் கல்யாண் படத்தின் காட்சியை போட்டு இந்த ரசிகர் ஹேப்பி ஆகி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *