சலார 2 படப்பிடிப்பு தள்ளிப்போகிறதாம்…பிரபாஸ்

2023ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வெளியான படம் சலார். இதில் அவருடன் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் நல்ல வசூலை பெற்றது. இதன் காரணமாக 2025ம் ஆண்டில் சலார் 2 படம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள்.
அதனால் தி ராஜா சாப் படத்தை அடுத்து சலார 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு அதற்கு முன்னதாக ஹனுமன் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறாராம் பிரபாஸ்.
அதனால் இந்த படத்தில் நடித்து முடித்த பிறகுதான் சலார் 2 படப்பிடிப்பு தொடங்கும் என்று டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் பிரசாந்த் தற்போது ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார். அதன் காரணமாகவும் இவர்களின் சலார் 2 கூட்டணி தள்ளிப்போகிறதாம்.