அல்லு அர்ஜுன் இணையும் படத்திற்காக அட்லீக்கு வழங்கும் சம்பளம்

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை அசத்தி வந்தவர் இயக்குனர் ஷங்கர்.
அவருக்கு பிறகு அந்த லிஸ்டில் தெலுங்கு சினிமாவின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இடம் பிடித்தார். தற்போது இவர்களின் லிஸ்டில் இணைய இருக்கிறார் அட்லீ.
தென்னிந்தியாவில் இருந்து உலகளவில் கவனத்தை ஈர்க்கும் ஒரு பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு நேற்று ஏப்ரல் 8 வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் இணையும் படத்தின் அறிவிப்பு பிரம்மாண்டமாக வெளியானது.
ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாராக இருக்கும் இப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கு மட்டும் ரூ. 250 கோடி செலவு என கூறப்படுகிறது.
இந்த படத்திற்காக அட்லீக்கு ரூ. 100 கோடி சம்பளம் என்றும் அல்லு அர்ஜுனுக்கு சுமார் ரூ. 175 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாம்.