மயோசிடிஸ் நோய் குறித்து சமந்தா உருக்கம்!
நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சமந்தா சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சமந்தா அளித்துள்ள நேர்காணல் வீடியோ இணையத்தில் வைரலாகி வரகிறது. அவர் கூறியதாவது ‘எனக்கு மயோசிடிஸ் நோய் இன்னும் முழுமையாக குணமாகவில்லை.
தொடர்ந்து அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆனாலும் முன்பு இருந்த பாதிப்பில் இருந்து தேறி இருக்கிறேன். இந்த நோய் பாதிப்பில் இருந்து விரைவில் முழுமையாக மீண்டு வருவேன்’ என்றார்.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.