பாலிவுட் நடிகரை இறுக்கி அணைத்து போஸ் கொடுத்த சமந்தா..ஒரு மணி நேரத்தில் பல லட்சம் லைக்!
நடிகை சமந்தா பாலிவுட் நடிகரை இறுக்கி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன.
ஹாலிவுட்டின் இயக்குநர்களான ரூஸ்ஸோ பிரதர்ஸின் புதிய வெப்தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 28ம் திகதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்தொடர் வெளியாகிறது. இந்த தொடரின் ஹிந்தி ரீமேக் தற்போது தயாராகி வருகிறது இந்த தொடரில் சமந்தா நடித்து வருகிறார்.
நடிகை சமந்தா நடிப்பில் குணசேகரன் இயக்கத்தில் உருவானத் திரைப்படம் சாகுந்தலம், கடந்த வாரம் திரையரங்கில் வெளியான இத்திரைப்படத்திற்கு படு மோசமான விமர்சனம் கிடைத்துள்ளது. சரித்திர கதையில் உருவான இந்த படம் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் ரீலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு ஒரு வழியாக ஏப்ரல் 14ம் திகதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது.
சரித்திர திரைப்படம் என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், சமந்தாவை தவிர படத்தில் எதுவுமே பார்க்கும்படி இல்லை என்று விமர்சனம் எழுந்தது. படம் வெளியான முதல் நாள் 1.5 கோடி வசூலித்த நிலையில், நேற்று வெறும் 60 லட்சத்தை மட்டுமே வசூலித்தது. இப்படம் இதுவரை வெறும் 10 கோடியை மட்டுமே வசூலித்துள்ளதால் சமந்தா வருத்தத்தில் உள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் தொடரைத் தயாரித்த ராஜ் நிடமொரு மற்றும் கிருஷ்ணா டிகே இருவரும் சிட்டாடல் வெப் தொடரையும் தயாரித்து வருகின்றனர். அண்மையில், சிட்டாடல் இணையத் தொடரின் சமந்தாவின் ஸ்டைல் லுக் போட்டோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதில் சமந்தாவுக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்கிறார். இந்தத் தொடர் பிரைம் வீடியோவிலும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த தொடரின் மூலம் நடிகர் வருண் ஓடிடியில் அறிமுகமாகிறார்.
சிட்டாடல் தொடரின் தயாரிப்பு பணி மும்பையில் நடந்து வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வட இந்திய இடங்களுக்கும், அதைத் தொடர்ந்து செர்பியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் நடைபெற உள்ளது. இந்த வெப் தொடரில் வருண் மற்றும் சமந்தா இருவரும் ஸ்டைலான உளவாளிகளாக நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸ் சர்வதேச அளவில் முன்னணி இடத்தைப் பிடிக்கும் இந்திய தொடர்களில் ஒன்றாக நிச்சயம் இருக்கும்.
இந்நிலையில் நடிகை சமந்தா, சிட்டாடல் வெப்சீரீஸின் பிரீமியர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக லண்டன் வந்துள்ளார். கருப்பு நிற உடையில் சும்மா அட்டகாசமாக இருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவானை இறுக்கி அணைத்து போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் வெளியான இந்த போட்டோ ஒரு மணிநேரத்தில் 8 லட்ச லைக்குகளை பெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் ராஜ் மற்றும் டிகே உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்து கொண்டுள்ளனர்.