சைட்டு கேப்பில் ஆர்.ஆர்.ஆர் படத்தை கலாய்த்த மணிரத்னம்!
மணிரத்னம் இயக்கத்தில் அமரர் கல்கி எழுதிய காவிய கதையை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மணிரத்தினத்திடம், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கர் விருதை வென்றது பற்றியும் பொன்னியின் செல்வன் ஆஸ்கர் வெல்லுமா என்பது பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மணிரத்தினம் முதலில் ஆர்ஆர்ஆர் பட குழுவினருக்கு தன் வாழ்த்துக்களை கூறினார். அதைத்தொடர்ந்து சத்தம் இல்லாமல் அவர் ராஜமௌலியையும் குத்தி காட்டி பேசி இருக்கிறார். அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நான் ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கவில்லை அது மக்களை சென்றடைய வேண்டும்.
ஏனென்றால் கல்கியின் கைவண்ணத்தில் உருவான இந்த வரலாற்று கதை அதிக அளவு விற்பனையான நாவல் என்ற பெயரை பெற்றுள்ளது. அப்படி ஒரு சிறப்பு மிகுந்த அந்த கதையை திரைப்படமாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அந்தக் கனவு தற்போது நினைவானதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்.
இதன் மூலம் அவர் ராஜமௌலிக்கும் நாசுக்காக ஒரு குட்டு வைத்திருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.