சிம்புக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்…நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக உச்சத்தில் வலம் வந்தார். கடந்த பல வருடங்களாக படங்களில் கதாநாயகனாக மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிகர் சிலம்பரசன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.
தற்போது சந்தானம் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, ஒருநாள் சிம்பு எனக்கு போன் செய்து, ‘படம் ஒண்ணு பண்ணுறேன். அதுல நீங்களும் நடிக்கணும்னு கேட்டார்’. அவர் கேட்டார்னா ‘யெஸ்’தான்.
அதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட இடத்துல அவரை வச்சிருக்கேன். சிம்பு எப்போது கேட்டாலும் ‘நோ’ சொல்ல மாட்டேன். என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். எங்கள் அதிரடியையும் அந்தப் படத்தில் எதிர்பாருங்கள். என தெரிவித்துள்ளார்.
தக் லைப் படத்திற்கு பின் சிம்புவின் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் தான் சிம்பு உடன் சந்தானம் நடிக்க போகிறார்.