பாகுபலி ரேஞ்சில் உருவாகும் சார்பட்டா 2… இதோட பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?

பாகுபலி ரேஞ்சில் உருவாகும் சார்பட்டா 2… இதோட பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா?
  • PublishedJanuary 31, 2024

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாக உள்ள சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆன திரைப்படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, ஜான் கொக்கேன், துஷாரா விஜயன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

ஓடிடியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பல்வேறு விருதுகளையும் வென்று அசத்தியது. இப்படத்தின் வெற்றிக்கு சந்தோஷ் நாராயணனின் இசையும் பெரும் பங்காற்றியது.

சார்பட்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கிய பா.இரஞ்சித், அடுத்ததாக தங்கலான் என்கிற பிரம்மாண்ட படத்தை இயக்கி முடித்துள்ளார். ஒரிஜினல் கேஜிஎப்பில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

இதில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.

தங்கலான் படத்தின் பணிகளை முடித்துள்ள இயக்குனர் பா.இரஞ்சித், தற்போது தன்னுடைய அடுத்த பட வேலைகளில் இறங்கி உள்ளாராம். அதன்படி அவர் அடுத்ததாக இயக்க உள்ள திரைப்படம் சார்பட்டா 2.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தொடங்கி இருக்கிறது. அதே வேளையில் நடிகர் ஆர்யாவும் இப்படத்திற்காக தற்போது தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தங்கலான் படம் ரிலீஸ் ஆன பின்னர் இதன் ஷூட்டிங்கை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சார்பட்டா 2 படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்தை ரூ.90 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ளாராம் பா.இரஞ்சித். இதன்மூலம் இப்படம் பாகுபலி ரேஞ்சுக்கு பிரம்மாண்ட படமாக உருவாக உள்ளது உறுதியாகி இருக்கிறது. முதல் பாகத்தை ஓடிடியில் வெளியிட்டிருந்தாலும் அதன் இரண்டாம் பாகத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய உள்ளார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *