300க்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு.. லியோ நடிகரின் லீலைகள் லீக்கானது….

300க்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு.. லியோ நடிகரின் லீலைகள் லீக்கானது….
  • PublishedJune 19, 2023

லியோ படத்தில் வில்லனாக நடித்துவரும் சஞ்சய் தத் (Sanjay Dutt) இதுவரை 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் 1971ஆம் ஆண்டு வெளியான ரேஷ்மா ஆர் ஸ்ஹேரா என்ற் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சஞ்சய் தத். அதன் பிறகு1981ஆம் ஆண்டு வெளியான ராக்கி படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் ஹிட்டானதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சஞ்சய் தத் பாலிவுட்டின் பச்சன், கான் நடிகர்களுக்கு ரொம்பவே டஃப் கொடுத்தவர்.

இந்த நிலையில், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதாவது 1993ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்கு தொடர்புடைய ஒருவரிடமிருந்து வாங்கிய ஒரு ரைபிளையும், கைத்துப்பாக்கியையும் வைத்திருந்ததற்காக சஞ்சய் தத்துக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருந்த அவர் சில வருடங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.

சிறை தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு சில காலம் ஓய்வில் இருந்துவிட்டு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.

ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் மிரட்டல் லுக்கில் தோன்றி தனது நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி அப்ளாஸை அள்ளினார். இதன் காரணமாக வில்லன் கதாபாத்திரத்திற்கு சஞ்சய் தத்தை பல இயக்குநர்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்தவகையில் தமிழில் இப்போது ஃபேமஸான இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து இயக்கும் லியோ படத்திலும் சஞ்சய் தத்தான் வில்லன். வில்லனாக மட்டுமின்றி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்கிறார் என்றும்,அவரும் ஒரு கேங்ஸ்டர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. காஷ்மீரில் நடந்த ஷூட்டிங்கில் கலந்துகொண்ட அவர் இப்போது சென்னையில் லியோ படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ராஜ்குமார் ஹிரானி பாலிவுட்டின் பிரபலமான இயக்குநர். இவர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து சஞ்சு என்ற படத்தை இயக்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான அப்படத்தில் சஞ்சய் தத்தாக நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருந்தார். அந்த சமயத்தில் சஞ்சய் தத் குறித்து ஹிரானி பேசியிருப்பது மீண்டும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய சஞ்சு படத்தில் கதாநாயகன் ஏறத்தாழ 308 பெண்களுடன் உடலுறவு வைத்திருப்பார். இதனையடுத்து சஞ்சய் தத் 308 பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அதுகுறித்து ராஜ்குமார் ஹிரானி பேசுகையில், “சஞ்சய் தத் தான் டேட்டிங் செய்யும் ஒவ்வொரு பெண்ணையும் முதலில் ஒரு கல்லறைக்கு அழைத்து செல்வார்.

அங்கு சென்றவுடன் என் அம்மாவை நீ சந்திக்க வேண்டும் என்பதற்காகதான் உன்னை இங்கு அழைத்து வந்தேன் என பெண்ணிடம் சொல்வார் சஞ்சய் தத். அந்த சமயத்தில் அந்த பெண்கள் என்ன ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை அவர் நோட்டமிடுவார். சஞ்சய் தத் சொன்னதை கேட்டுவிட்டு மனமுருகிய பெண்களுடன் அவர் நெருக்கமாக பழகி டேட்டிங் செய்வார். இத்தகைய தில்லு முல்லு வேலையை செய்துதான் 308 பெண்களை அவர் ஈர்த்திருக்கிறார்” என கூறியிருந்தார். இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *