விஜய் முன்பதாகவே சூர்யா செய்த வேலை : பாராட்டும் ரசிகர்கள்!

விஜய் முன்பதாகவே சூர்யா செய்த வேலை : பாராட்டும் ரசிகர்கள்!
  • PublishedJune 20, 2023

கடந்த சில நாட்களாகவே விஜய் பற்றிய தகவல்கள் தான் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. விஜயின் லியோ திரைப்படம், அரசியல் என அனைவரின் கவனமும் விஜய் பக்கம் திரும்பியுள்ளது.

இந்நிலையில்,  சத்தமே இல்லாமல் சூர்யா செய்திருந்த ஒரு விஷயமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்பொழுதுதான் விஜய் மாணவர்களின் நலனில் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்.

ஆனால் இதற்கு முன்பாகவே சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி படிக்க வசதி இல்லாத மாணவ மாணவிகளுக்கு தன் சொந்த செலவில் கல்வியை கொடுத்து வந்தார். இது அப்போதே பலரின் பாராட்டுகளையும் பெற்றது.

அதைத்தொடர்ந்து சூர்யாவின் அறக்கட்டளையின் மூலமாக படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று ஒரு நல்ல அந்தஸ்தில் இருக்கின்றனர். இதையெல்லாம் அவர் என்றுமே பகிரங்கமாக விளம்பரப்படுத்திக் கொண்டது கிடையாது.

அப்படித்தான் தற்போது விஜய் மாணவர்களை சந்தித்த நாளன்று சூர்யாவும் தன் அறக்கட்டளையின் மூலம் படிக்கும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மீடியாவில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *