சக்தி திருமகன் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்

சக்தி திருமகன் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல்
  • PublishedSeptember 21, 2025

அருண் பிரபு இயக்கத்தில் மூன்றாவது படமாக உருவாகி இரண்டு தினங்களுக்கு முன் திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் சக்தி திருமகன்.

இப்படத்தில் இசையமைப்பாளரும், பிரபல நடிகருமான விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார்.

இவருடன் இணைந்து சுனில் கிற்பலனி, வாகை சந்திரசேகர், திருப்பதி ரவிந்த்ரா ஆகியோர் நடித்திருந்தனர். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்துள்ள சக்தி திருமகன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், வெளியாகி இரண்டு நாளில் இப்படம் செய்துள்ள பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இரண்டு நாட்களில் ரூ. 1.7 கோடி வசூல் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *