பாடல் வரிகள் பிடிக்கவில்லை எனக் கூறிய சங்கர் : படத்தையே தூக்கியெறிந்த வாலி!

பாடல் வரிகள் பிடிக்கவில்லை எனக் கூறிய சங்கர் : படத்தையே தூக்கியெறிந்த வாலி!
  • PublishedApril 12, 2023

கவிஞர் வாலி எம்ஜிஆர் தொடங்கி இன்றைய தலைமுறையான நடிகர் தனுஷின் படம் வரைக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். வாலி எப்போதுமே அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய சிந்தனைகளை இளமையாக மாற்றிக் கொள்வார்.

ஆனால் அப்படி இருந்தும்,  சங்கர் வாலியின் கோபத்திற்கு சிக்கியுள்ளார்.  இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் முதன் முதலில் இயக்கிய திரைப்படம்தான் ஜென்டில்மேன். இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

படத்திற்கு இசையமைத்தவர் இசை புயல் ஏ ஆர் ரகுமான். ரகுமானுக்கு அதுதான் மூன்றாவது படம். படத்திற்கு எல்லா பாட்டையும் எழுதிக் கொடுக்க கவிஞர் வாலி ஒப்பந்தமானார்.

அனைத்து பாடல்களையும் எழுதிக் கொடுக்க ஒப்பந்தமான கவிஞர் வாலி இயக்குனர் சங்கர் தெரியாமல் செய்த ஒரு சிறிய தவறினால் ஒரே பாட்டோடு படத்தை விட்டு விலகி விட்டார். வாலி மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கும் சங்கரால் எவ்வளவு பேசியும் வாலியை மீண்டும் படத்திற்குள் கொண்டு வர முடியவில்லை. அதன் பின்னர் இணைந்தவர் தான் கவிஞர் வைரமுத்து.

கவிஞர் வாலி இந்த படத்திற்கு முதன் முதலில் எழுதிய பாடல் ‘ சிக்கு புக்கு ரயிலே’. இந்த பாடல் அப்போது மிகப்பெரிய ஹிட் அடித்தது. பாடலின் முதல் இரண்டு வரிகள் இன்றைய புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாசால் பாடப்பட்டிருக்கும்.

முதலில் வாலி இந்த பாட்டை எழுதிக் கொடுக்கும் பொழுது சங்கருக்கு அதில் திருப்தி இல்லையாம் . சிக்கு புக்கு ரயிலே என்பது என்னவோ தனக்கு பிடிக்காதது போல் இருந்ததால் அதே மெட்டில் வேறு வரிகளை கேட்டிருக்கிறார்.

வாலி அப்பொழுதே இந்த பாடல் செம ஹிட் ஆகும் என்று சொல்லி இருக்கிறார். இருந்தாலும் சங்கர் ஒத்துக் கொள்ளாததால் வேறு வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால் பாடல்கள் பதிவான பிறகு சிக்கு புக்கு ரயிலே என்னும் வரிகள் கொண்ட பாடலை தான் ஓகே செய்து இருக்கிறார் சங்கர். இது கவிஞர் வாலிக்கு மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இந்த படத்தில் நான் இனிமேல் வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லி விலகி விட்டாராம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *