குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாகிய சுஜாதா!

குரங்கின் கையில் கிடைத்த பூமாலையாகிய சுஜாதா!
  • PublishedApril 12, 2023

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய மங்கம்மா சபதம் திரைப்படம் உங்கள் எல்லோருக்கும் நினைவிருக்கும். அந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர்தான் சுஜாதா.

இவருடைய அழகிற்கும், நடிப்பிற்குமே ஏகப்பட்ட இரசிகர்கள் இருந்தார்கள். அந்த அளவுக்கு உணர்ச்சி பொங்க நடிக்கக்கூடியவர். ஆனால் அவரின் வாழ்க்கை சோகம் தழும்பியதாம். குரங்கு கையில் கிடைத்த பூ மாலைப்போல தான் காதலித்து கரம் பிடித்தவராலேயே நிறைய கொடுமைகளை அவர் அனுவித்தாராம்.

சுஜாதா தன் வீட்டின் கீழ் பகுதியில் ஊறுகாய் கம்பெனி நடத்திக் கொண்டு மேல் வீட்டில் குடியிருந்தாராம். ஒரு நாள் சுஜாதாவை அவரது கணவர் ஜெயகர் பெல்டால் அடிக்கும் சத்தமும் வலி தாங்க முடியாமல் அவர் அழுது கொண்டு கதறும் சத்தத்தையும் எதிர்வீட்டில் குடியிருந்த நடிகை குட்டி பத்மினிக்கு கேட்டிருக்கிறது.

உடனே குட்டி பத்மினியும் அவருடைய அம்மாவை அழைத்துக் கொண்டு ஜெயகரை அடிக்க விடாமல் தடுத்தனர். அப்போது சுஜாதா எதுவும் பேசாமல் அமைதியாக அழுது கொண்டே நின்று கொண்டிருந்தாராம்.

இந்த சம்பவம் நடந்த பிறகு அந்த வீட்டை காலி செய்துவிட்டு சுஜாதாவை ஜெயகர் அழைத்துக் கொண்டு எங்கேயோ சென்றுவிட்டாராம். அவர் இறந்த செய்தி கூட யாருக்கும் தெரியவில்லை. ஒரு சில நடிகர்கள் மட்டுமே சுஜாதாவின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்கள் என்று நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *