பாலாவிற்காக தோற்காத ஆயுதங்களை கொடுக்கும் வைரமுத்து!

பாலாவிற்காக தோற்காத ஆயுதங்களை கொடுக்கும் வைரமுத்து!
  • PublishedApril 12, 2023

இயக்குனர் பாலா- சூர்யா கூட்டணியில் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான வணங்கான் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 35 நாட்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஒரு சில பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது.

இதனால் தற்போது  இந்த  படத்தை நடிகர் அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் இதில் அருண் விஜய்யின் மிரட்டலான கெட்டப்பும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாகவே ஒரு சில சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டிருக்கும் வைரமுத்துவிற்கு இந்த படத்தின் மூலம் நல்ல ஒரு காம்பேக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்காகவே தோற்காத ஆயுதங்களை தன்னுடைய பட்டறையில் இருந்து வடித்துக் கொடுப்பேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆகையால் வணங்கான் படத்தில் வைரமுத்து இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் என்று பாலாவும் நம்புகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *