தேடி போய் வாய்ப்பு கேட்ட மீனா : வேண்டாம் என மறுத்த ரஜினி!

தேடி போய் வாய்ப்பு கேட்ட மீனா : வேண்டாம் என மறுத்த ரஜினி!
  • PublishedApril 12, 2023

குழந்தை நட்சத்திரமாக சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்த மீனா பின்னாளில் அவருக்கே ஹீரோயினாக நடித்தார். அப்படி அவர்கள் இணைந்து நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட்டடித்தது.

அது மட்டுமல்லாமல் ரஜினிக்கும் மீனாவின் மீது தனி பாசம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் தனக்கு பிடித்த ஹீரோயின்களில் அவரும் ஒருவர் என்று சூப்பர் ஸ்டார் பலமுறை தெரிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் ரஜினிக்கு பிடித்த நடிகையான மீனா தேடி போய் வாய்ப்பு கேட்டும் அவர் கொடுக்க மறுத்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது மீனாவுக்கு நல்ல கதை ஞானம் இருக்கிறது. ஒரு பட கதையை சொன்னால் அது பற்றி தன்னுடைய கருத்துக்களை பலரும் வியக்கும் அளவுக்கு அவர் கூறுவாராம்.

இதை நன்றாக தெரிந்து வைத்திருந்த ரஜினி படையப்பா படத்தின் கதையை அவரிடம் கூறியிருக்கிறார். அதை கேட்ட மீனா நீலாம்பரி கேரக்டரில் நான் நடிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதனால் ஷாக்கான சூப்பர் ஸ்டார் உங்களுக்கு குழந்தை முகம் இது போன்ற வில்லி கேரக்டர்கள் செட்டாகாது என்று மறுத்தாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *