டோலிவுட்டிலும் வேட்டையை ஆரம்பித்த சங்கர் : சம்பளத்தை கேட்டா சாக் ஆகிடுவீங்க!

டோலிவுட்டிலும் வேட்டையை ஆரம்பித்த சங்கர் : சம்பளத்தை கேட்டா சாக் ஆகிடுவீங்க!
  • PublishedApril 1, 2023

கேம் சேஞ்சர் படத்தில் இயக்குனர் ஷங்கர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

கோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இப்போது தில் ராஜு தயாரிப்பில் பெரிய பட்ஜெட் படமான கேம் சேஞ்சர் என்ற தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேம் சேஞ்சர் படத்தின் மேக்கிங் தாறுமாறாக இருக்கிறது. இதனால் இயக்குனர் ஷங்கருக்கும் பல கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

கேம் சேஞ்சர் என்ற டைட்டில் மற்றும் ராம்சரணின் ஃபர்ஸ்ட் லுக் அனைத்தும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த படம் பொலிட்டிக்கல் ஜானரில் உருவாகியுள்ளது.

ஏற்கனவே கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர் என்ற பெருமையை பெற்றிருந்த ஷங்கர் தற்போது டோலிவுட்டிலும் தன்னுடைய வேட்டையை ஆரம்பித்திருக்கிறார். மேலும் தெலுங்கில் இயக்குனர் ராஜமௌலி மட்டும்தான் 50 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.

இப்போது அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில் தற்போது தமிழ் இயக்குனரான ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தில் 50 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *