தீபாவளியை குறிவைக்கும் சிவ கார்த்திகேயன், கார்த்தி!

தீபாவளியை குறிவைக்கும் சிவ கார்த்திகேயன், கார்த்தி!
  • PublishedMay 25, 2023

பெரும்பாலும் பண்டிகை நாட்களை குறி வைத்து தான் படங்களை பெரிய நடிகர்கள் ரிலீஸ் செய்கிறார்கள்.  அந்தவகையில்,  இந்த வருட தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தியின் படங்கள் வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இப்போது இந்த இரு நடிகர்களுமே ஒரு நிலையான இடத்தில் இருக்கிறார்கள். அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் தோல்வியை தழுவியது. இப்போது மாவீரன் மற்றும் அயலான் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் கார்த்திக்கு கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இப்போது ஜப்பான் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த தீபாவளிக்கும் இவர்கள் மோதிக் கொள்கின்றனர். அதன்படி அயலான் மற்றும் ஜப்பான் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *