தளபதி 68 இல் இசையமைப்பாளர் மாற்றப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

தளபதி 68 இல் இசையமைப்பாளர் மாற்றப்பட்டமைக்கான காரணம் வெளியானது!
  • PublishedMay 25, 2023

தளபதி 68 படத்தின் அப்டேட் வந்ததிலிருந்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டிருக்கிறார்கள். முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்ற மிகப்பெரிய சர்ச்சை நிலவி வந்தது.

கடைசியாக யுவன் சங்கர் ராஜா தான் தளபதி 68 படத்தின் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் விஜய்க்கு எப்போதுமே அனிருத் தான் இசையமைப்பார். மேலும் வாரிசு படம் தெலுங்கு பக்கம் சென்றதால் தமன் இசை அமைத்திருந்தார்.

இந்நிலையில் தளபதி 68 படத்தில் அனிருத் இசை அமைக்காததன் காரணம் வெளியாகி இருக்கிறது. அதாவது தளபதி 68 இன் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்திருந்தார்.

அப்போது தயாரிப்பு நிறுவனம் லவ் டுடே படத்திற்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டபோது உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டாராம். தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருந்தும் யுவன் இவ்வளவு பணிவுடன் நடந்து கொண்டது ஏஜிஎஸ்-க்கு பிடித்திருந்தது. இதனால் தான் இசையமைப்பாளர் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *