சிம்புவை தூக்கி எறிந்த கமல்? STR48-க்கு ஆப்பு தானா…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி லிட்டில் சூப்பர் ஸ்டார் என பெயர் எடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்த சிம்பு ஒரு கட்டத்தில் தொடர் தோல்வியால் நொந்து போனார்.
வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்திற்கு பின் சிம்பு இஸ் ஆன் தி வே என்ற அளவு மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்தார்.
அதற்கு பிரதி உபகாரமாக மூன்று படங்களை நடித்து தருமாறு கேட்டு இருந்தார். வெந்து தணிந்தது காடு மட்டுமே நடித்துக் கொடுத்துவிட்டு கொரோனா குமார் படத்தை கிடப்பில் போட்டு விட்டார்.
ஐசரி கணேஷிடம் வாங்கிய தொகையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கொடுத்து கணக்கு முடிந்தது என்று கிளம்பிவிட்டார் சிம்பு. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் பொறுத்து பார்த்து கடைசியில் பொங்கி எழுந்தார். இந்த சர்ச்சையில் தந்தை TR தலையிட்ட போதும் எந்த ஒரு மாற்றமும் வராமல் அவரது கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார்.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரங்கூன் பட புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சரித்திர பின்னணியை பின்புறமாகக் கொண்ட STR48 படத்தில் ஒப்புக்கொண்டு கால்ஷீட் ஒதுக்கினார்.
சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை ஒட்டி STR48 படத்தின் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் கமல்.
அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படமாக சிம்புவின் STR 48 இருந்தது. சரித்திர பின்னணி என்பதால் கிராபிக்ஸ் கலைஞர்கள் முதற்கொண்டு பல வேலைகளை தேர்ந்தெடுத்து செய்தனர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தினர். இதனால்தான் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று ஒரு புறம் செய்தி வந்து கொண்டிருந்தது.
கமலஹாசனின் ரத்த உறவுகள் மற்றும் மகள் அக்சரா ஹாசன் சிம்புவின் ஆட்டிட்யூட் பத்தி தந்தையிடம் கூறி சிம்பு வேண்டாம் என்று விலக சொல்லி இருக்கிறாராம். அவர் தயாரிப்பாளர்களிடம் நடந்து கொள்வது, சூட்டிங் ஒழுங்கா வராதது என அடுக்கடுக்கான குறைகளை அடுக்கினாராம் அக்சரா.
இவர் படத்திற்கு நூறு கோடி பட்ஜெட் போட்டால் வசூல் வருமா என்று கேள்வி கணை தொடுத்து அப்பாவை ஆப் செய்துள்ளார் அக்சரா என்று சில தகவல்கள் உலா வருகின்றன.