சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா??

சைரன் படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா??
  • PublishedFebruary 19, 2024

முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சைரன்.

ரிவென்ஜ் கதைக்களத்தில் உருவான இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுதஜா விஜயகுமார் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இந்நிலையில், சைரன் படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

எதிர்பார்த்ததை விட இது குறைவான வசூல் தான் என திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இனி வரும் நாட்களில் சைரன் திரைப்படத்தின் வசூல் எப்படி இருக்க போகிறது என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *