கருப்பு உடையில் அச்சு அசல் விஜய் போல் இருக்கும் சஞ்சய்…

கருப்பு உடையில் அச்சு அசல் விஜய் போல் இருக்கும் சஞ்சய்…
  • PublishedFebruary 18, 2024

நடிகர்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் வருவது ஒன்றும் புதிது கிடையாது. அந்த வரிசையில் விஜய்யின் மகனும் தற்போது சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

ஆனால் இயக்குனராக அவர் தன் முதல் படியை எடுத்து வைத்திருப்பது ஆச்சர்யம் தான். அப்பா போல் அழகு, ஸ்டைல், டான்ஸ் என எல்லாவற்றிலும் திறமையாக இருக்கும் சஞ்சய் ஒரு பக்கா ஹீரோ மெட்டீரியலாக இருக்கிறார்.

அதற்கு நேர் மாறாக படம் இயக்குவதில் ஆர்வம் கொண்டுள்ள சஞ்சய் தற்போது லைக்காவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இவருடைய பட அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில் சஞ்சயின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதில் கருப்பு சட்டை பேண்ட் அணிந்திருக்கும் சஞ்சய் அப்பா போலவே ரொம்பவும் பணிவோடு கைகளை கட்டியபடி நிற்கிறார். அந்த போட்டோ ஏதோ ஒரு விழாவில் எடுக்கப்பட்டது போல் இருக்கிறது. ஆனால் பின்னணியில் இருப்பவரும் சஞ்சய் உடன் போட்டோ எடுத்துக் கொண்டவரும் வெள்ளை நிற உடையில் இருக்கின்றனர்.

அதை பார்க்கும் போது தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளாக இவர்கள் இருக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது. ஒரு வேளை சஞ்சய் தன் அப்பாவின் கட்சி அலுவலகத்திற்கு வந்தபோது இந்த போட்டோ எடுக்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *