சிவகார்த்திகேயன் சம்பளத்தில் கைவைக்க போகிறாரா கமல்ஹாசன்?

சிவகார்த்திகேயன் சம்பளத்தில் கைவைக்க போகிறாரா கமல்ஹாசன்?
  • PublishedDecember 6, 2023

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.21 படத்தினால் தயாரிப்பாளருக்கு புது சிக்கல் ஏற்பட்டு உள்ளதாம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.21 படத்தையும் கமல்ஹாசன் தான் தயாரித்து வருகிறார்.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளதால் இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் தான் நடைபெற்றது.

இதன் காரணமாக எஸ்.கே.21 படத்தின் பட்ஜெட் எகிறிவிட்டதாக கூறப்படுகிறது. திட்டமிட்டதைவிட ரூ.25 கோடி அதிகமாகிவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போய் உள்ளாராம் கமல்ஹாசன்.

இதனை ராஜ்கமல் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ள சோனி நிறுவனம் இந்த பட்ஜெட் அதிகமானதுக்கு தாங்கள் பொறுப்பாக முடியாது என கைவிரித்துவிட்டதால் கமல்ஹாசன் அப்செட் ஆகி உள்ளாராம்.

இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளத்திலும் கைவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *