விஷ்ணு விஷால் -அமீர்கான் பத்திரமாக மீட்பு… வைரலாகும் புகைப்படம்

விஷ்ணு விஷால் -அமீர்கான் பத்திரமாக மீட்பு… வைரலாகும் புகைப்படம்
  • PublishedDecember 5, 2023

மிக்ஜாம் புயலால் சென்னை அதிகமான அளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. பலர் தங்களது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டுமில்லாமல் சில அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இன்றைய தினம் மழை குறைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து மீட்பு பணிகளில் அரசு ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவற்றை கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றனர்.

தனியார் தொண்டு நிறுவனங்களும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை பெய்துள்ள மழை மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மழை அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது குறித்து விஷால், விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களும் தங்களது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளனர். விஷ்ணு விஷால் இந்த மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் உதவி வேண்டியிருந்தார்.

இந்நிலையில் காரப்பாக்கம் பகுதியில் சிக்கிய மக்களை தமிழக தீயணைப்புத் துறையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேலும் தன்னுடைய தாயாரின் சிகிச்சைக்காக கடந்த இரு மாதங்களாக சென்னை காரப்பாக்கத்தில் வீடு எடுத்து தங்கியிருந்த நடிகர் அமீர்கானையும் தீயணைப்புத் துறை வீரர்கள் பத்திரமாக போட் மூலம் மீட்டுள்ளனர்.

இதையடுத்து தமிழக தீயணைப்பு துறையினருடன் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *