ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை வளைத்துப்போட்ட ‘வி’ நடிகர்… கோலிவுட்டில் கிசு.. கிசு..

ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை வளைத்துப்போட்ட ‘வி’ நடிகர்… கோலிவுட்டில் கிசு.. கிசு..
  • PublishedDecember 5, 2023

‘வி’ நடிகர் ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை தனது கன்ட்ரோலில் வைத்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

தென் மாவட்டத்தை சேர்ந்த அந்த நடிகர் எப்படியாவது சினிமாவில் வென்று விட வேண்டும் என தவமிருந்தவர். பல ஆடிஷன்களுக்கு சென்று சின்ன சின்ன ரோல்களில் தலைக்காட்டிக்கொண்டிருந்தார்.

இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரிடம் படத்தில் ஒன்றிரண்டு சீன்களில் தலை காட்டும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாகவே தனது திரை பயணத்தை தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் ஸ்வீட் இயக்குநர் இவரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முக்கியமாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டூ ஹீரோ என்ற நிலைக்கு உயர்ந்தார்.

முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்கள் இவருக்கு கிடைத்தன. கிடைத்தவை எல்லாம் புதிய ஜானர் கதைகள்; அதை கொண்டு வந்தவர்கள் எல்லாம் புதிய தலைமுறை இயக்குநர்கள்.

புதிய தலைமுறை இயக்குநர்களோடு இணைந்த வி நடிகர் ஒரே வருடத்தில் சில ஹிட் படங்களை கொடுத்து டாப் 10 என்ற இடத்துக்குள் நுழைந்துவிட்டார். தனது ஒவ்வொரு படத்திலும் புதிது புதிதாக நடித்து அசால்ட்டாக அப்ளாஸை அள்ளினார். இதனால் பலரும் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.

சினிமாவில் ஏற்றம் என்ற ஒன்று இருந்தால் இறக்கம் என்ற ஒன்று இருக்கும்தானே. அப்படித்தான் இந்த நடிகருக்கும் சில வருடங்கள் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் தன்னை போல சினிமாவில் யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தனக்கு பழக்கமானவர்கள் சொன்ன கதையில் எல்லாம் நடித்தார்; அதில் பணத்தை போட்டார் அதனால் அந்த சறுக்கல் வந்ததாக பலரும் கூறினார்கள்.

ஆனால் நடிகரின் சறுககலுக்கு அது மட்டும் காரணமில்லையாம். அதாவது நடிகருக்கு மது பழக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்குமாம். ஒருகட்டத்தில் மது பழக்கமின்றி மாதுக்கள் மீது தனது கவனத்தை திருப்ப ஆரம்பித்தாராம் நடிகர். அதனால் சினிமாவில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியவில்லையாம்.

இருந்தாலும் சுதாரித்துக்கொண்ட அவர் இனி ஃபீல்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தாராம். அப்படிப்பட்ட நேரத்தில்தான் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்ற நடிகை, தன்னுடன் ஒரு மெகா ஹிட் படத்தில் நடித்த நடிகை ஆகியோருடன் சேர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நடிகர்.

அந்த சமயத்தில் இரண்டு பேரிடமும் நெருக்கம் காட்டிய நடிகர் ஒருகட்டத்தில் தனது வலையில் வீழ்த்திவிட்டாராம். எனவே ஒரு நாள் இந்த நடிகையை பார்த்துக்கொள்வது மறுநாள் இன்னொரு நடிகையை பார்த்துக்கொள்வது என்று தனது வேலைகளை ஆரம்பித்தாராம். இப்படிப்பட்ட சமயத்தில் அக்கட தேசத்து நடிகை ஒருவரும் நடிகருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

அவரின் அழகில் மயங்கிய நடிகை எப்படியோ அந்த நடிகையையும் தனது வலையில் வீழ்த்திவிட்டாராம். இவருடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதும் நடிகையை இரவு தனது காரில் ஏற்றிக்கொண்டு ஈசிஆர் பக்கம் சென்றுவிட்டு காலையில்தான் கோடம்பாக்கமே வருகிறாராம்.

இதில் விஷயம் என்னவென்றால் அந்த மூன்று நடிகைகளும் தன்னுடன் மட்டுமே நடிகர் பொழுதை கழிக்கிறார் என்று ஒவ்வொருவரும் நம்பிக்கொண்டிருக்கிறார்களாம். இதனை பார்த்து வாய் பிளந்த கோலிவுட்டினர் எப்படி ய்யா ஒரே நேரத்தில் மூன்று நடிகைகளை இந்த நடிகர் சமாளிக்கிறார் என்று கிசுகிசுத்துவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *