நிலைமை மோசமா இருக்கு….. யாரும் உதவ வரல; சிக்கித்தவிக்கும் விஷ்ணு விஷால்

நிலைமை மோசமா இருக்கு….. யாரும் உதவ வரல; சிக்கித்தவிக்கும் விஷ்ணு விஷால்
  • PublishedDecember 5, 2023

தனது வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்ததோடு, நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருவதாக நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் மிக்ஜாம் புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இன்று மழை ஓய்ந்துள்ளதால் மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சென்னையில் வசித்து வரும் சினிமா பிரபலங்களும் இந்த பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று நடிகர் விஷால், தன் வீட்டில் தண்ணீர் புகுந்ததை அடுத்து வீடியோ வெளியிட்டு இருந்தார். அதேபோல் நடிகர் ரோபோ சங்கரும் தன் வீட்டின் முன் தேங்கிய வெள்ளநீரை வீடியோ எடுத்து பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலும் தன் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டதாகவும், தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை எனக்கூறி எக்ஸ் தளத்தில் தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

அவரின் பதிவை பார்த்த ரசிகர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த பதிவில், காரப்பாக்கத்தில் உள்ள என் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. அதன் அளவும் போகப்போக மோசமாக உயர்ந்து வருகிறது. உதவி கேட்டு அழைத்திருக்கிறேன். இங்கு கரண்ட் இல்ல, வைஃபை இல்ல, போன் சிக்னல் இல்ல, எதுவுமே இல்ல. என் வீட்டு மொட்டை மாடியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு இருப்பவர்களுக்கும் உதவி கிடைக்கும் என நம்புகிறேன். சென்னை மக்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *