சினிமாவிற்காக உடல் ரீதியில் காயப்படுத்திக் கொண்ட சில நடிகர்கள்!

சினிமாவிற்காக உடல் ரீதியில் காயப்படுத்திக் கொண்ட சில நடிகர்கள்!
  • PublishedMay 5, 2023

சினிமாவிற்காகவே தன்னை முழுமையாக அர்பணித்த சில நடிகர்கள். சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்து அதனால் சில விபத்துக்களையும் சந்தித்துள்ளார்கள்.

அப்படியான சில நடிகர்களை இந்த பதிவில் பார்க்கலாம்,

அஜித்: அல்டிமேட் ஸ்டார் என அழைக்கப்படும் அஜித் குமார் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சண்டைக் காட்சிகளில் பின்னி பெடலெடுப்பார். கார் மற்றும் பைக் ரேசிங்கில் அதிக ஆர்வம் கொண்ட அஜித்,  தன்னுடைய படங்களில் அப்படி ஒரு காட்சி மட்டும் இருந்தால் அதை அல்வா சாப்பிடுவது போல் நடித்து முடிப்பார். இவருடைய ஸ்பைனல் கார்டில் பல போல்ட் நட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.

அப்பாஸ்: 1996 இல் காதல் தேசம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சாக்லேட் பாய் தான் அப்பாஸ்.  தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,  கன்னட படங்களிலும் நடித்த இவர் ஆக்சன் காட்சிகளில் நடிக்கும் போது எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மூட்டில் இவருக்கு ஸ்டீல் பொருத்தப்பட்டுள்ளது.

கமல்: தனது 4 வயதில் சினிமா பயணத்தை துவங்கிய உலக நாயகன் கமலஹாசன் ஒவ்வொரு படங்களிலும் ஏதாவது ஒரு வெரைட்டி காட்ட வேண்டும் என்று வெறித்தனமாக நடிக்க கூடியவர். அதிலும் ஆளவந்தான் படத்தில் இருந்தே இவருக்கு பிரச்சனை தான். பல ஆபரேஷன்களை செய்து உடம்பு முழுக்க பல பிளேட்டுகள் பொருத்தப்பட்டு,  இரும்பில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

அர்ஜுன்: ஆக்சன் கிங் என அழைக்கப்படும் அர்ஜுனின் படங்களில் பெரும்பாலும் சண்டை காட்சிகளும் சாகச காட்சிகளும் தான் நிரம்பி இருக்கும். அந்த காலத்தில் சண்டைக்காட்சிகளில் மிக ஆக்ரோஷமாக செயல்படும் அர்ஜுன்இ ஆக்சன் காட்சிகளில் வெறித்தனமாக நடித்ததால் கை எலும்பு முறிந்து அதற்கு பிளேட் வைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *