கிடப்பில் போடப்பட்ட ஷாருக்கான் படம் : அட்லியின் நிலைப்பாடு என்ன?

கிடப்பில் போடப்பட்ட ஷாருக்கான் படம்  :  அட்லியின் நிலைப்பாடு என்ன?
  • PublishedMay 5, 2023

இயக்குனர் அட்லீ ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹிட் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர்.

தமிழ் சினிமாவில் இவர் வந்து குறுகிய காலங்களே ஆன போதும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை இயக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு கிடைத்தது.

கதாநாயகியாக நயன்தாரா,  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லன் என தொடங்கப்பட்டு படத்தின் பெயர் ஜவான் என உறுதி செய்யப்பட்டு போஸ்டர்களும் வெளியாகின.  படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக ஹைதராபாத் மற்றும் சென்னையிலும் நடைபெற்றன.

ஆனால் சமீப காலமாக இந்த படத்தின் அப்டேட் மற்றும் ரிலீஸ் தேதி மட்டும் கிணற்றில் போட்ட கல்லாக கிடைக்கிறது. அட்லீயும் இந்த படத்தை பற்றி பொது நிகழ்ச்சிகளில் எதுவும் பேசுவதில்லை.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு அவர் நடித்த பதான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதன் பின்னர் மற்றொரு வெற்றியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.

ஆனால் அட்லீயோ ஜவான் படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் எதிலுமே கவனம் செலுத்தாமல் இருக்கிறாராம். படம் ஜூனில் ரிலீஸ் ஆவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.

ஆனால் தற்போதைய தகவலின்படி படம் ஜூனில் ரிலீஸ் ஆவதும் சந்தேகம் தானாம். இதனால் ஷாருக்கான் இயக்குனர் அட்லீ மீது கோபத்தில் இருக்கிறாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *