ஈகோவால் சேர்ந்து நடிக்க மறுக்கும் சில பிரபலங்கள்!

ஈகோவால் சேர்ந்து நடிக்க மறுக்கும் சில பிரபலங்கள்!
  • PublishedJune 3, 2023

சினிமா பிரபலங்கள் என்னதான் நண்பர்களாக பழகினாலும், தொழில் ரீதியாக போட்டி, சில நேரங்களில் பொறாமையுடனும் செயற்படுவார்கள்.

இதனால் அவர்களுடைய நட்பும், பறிப்போவதுடன், மீண்டும் இணைந்து பணிப்புரிய வாய்ப்பில்லாமல் போகும். அப்படியான சிலரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுஷ்- சிம்பு: இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதையும் தவிர்த்து,  சக நடிகர்களாய் இருந்தாலும் அவரவர் வெற்றியில் முக்கியத்துவம் காட்டி வந்தனர். இந்நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சிம்பு காதலித்த பெண்ணை தனுஷ் மணக்க,  இதுபோன்ற மன கசப்புகளால் இதுவரை ஒன்று சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி-சத்யராஜ்: 80ஸ்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.  சிவாஜி படத்தில் சங்கர் சத்யராஜிடம் வில்லனாக நடிக்க சொன்னபோது அதை மறுத்திருக்கிறார். பல படங்களில் அவருக்கு வில்லனாக நான் நடித்து விட்டேன் என் படங்களில் ரஜினியை வில்லனாக நடிக்க சொல்லுங்கள் எனவும் முரண்பட பேசியதன் காரணமாக அதன்பின் அவர்கள் இணைந்து நடிக்கவில்லை.

அஜித்-வடிவேலு: மைனர் மாப்பிள்ளை,  ஆசை,  ராசி, தொடரும் போன்ற படங்களில் இருவரும் ஒன்று சேர்ந்து நடித்திருப்பார்கள். ஆசைப் பட வெற்றிக்கு பிறகு முன்னணி கதாநாயகனாக வலம் வந்த அஜித் அதன்பின் வடிவேலுவுடன் இணைந்து நடிக்கையில் வடிவேலு அஜித்திடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டதால் அதன்பின் இவருடன் நடிக்க மறுத்து விட்டாராம்.

சந்தானம்- சிவகார்த்திகேயன்: இருவரும் விஜய் டிவி மூலம் சினிமா பயணத்தை தொடங்கியவர்கள். இதில் நகைச்சுவை நடிகராக வருவார் என நினைத்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக கதாபாத்திரம் மேற்கொண்டதால் அதை கண்டு படங்களில் ஹீரோவாக இடம் பெற்றார் சந்தானம். இது போன்ற ஈகோ கிளாஸ் ஆல் இதுவரை இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *