கமலை வைத்து காய் நகர்த்தும் பாகுபலி பிரபலம்!

கமலை வைத்து காய் நகர்த்தும் பாகுபலி பிரபலம்!
  • PublishedJune 3, 2023

பாகுபலி திரைப்படம் மூலம் தனக்கென்ற ஒரு இடத்தை பிடித்தவர்தான் நடிகர் பிரபாஸ். இந்த படத்தை தொடர்ந்து இவருடைய அடுத்ததடுத்த படங்கள் குறித்து ஆவல் அதிகமாக இருந்தது.

இருந்தாலும், அடுத்தடுத்து வெளியாக படங்கள் தோல்வியை தழுவின. இதனால் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருக்கும் கமலை வைத்து காய் நகர்த்த பார்க்கிறார்.

அதாவது,  பிரபாஸ் நடிக்க இருக்கும் ப்ராஜெக்ட் மு பிரம்மாண்டமான முறையில் எடுக்க வேண்டும் என்பதற்காக பாலிவுட்டில் அமிதாப் பச்சன்,  தீபிகா படுகோன் மற்றும் வில்லன் கேரக்டருக்கு கமல் என்று பெரிய நடிகர்களை வைத்து எப்படியாவது இப்படத்தை ஹிட் செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு வருகிறார்.

ஏற்கனவே தெலுங்கு ஹீரோக்கள் மத்தியில் பிரபாஸுக்கு பெரிதும் போட்டி ஏற்பட்டு வருகிறது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் என இவர்கள் அனைவரும் தெலுங்கு மார்க்கெட்டை வளைத்து வைத்திருக்கும் இளம் ஹீரோக்கள்.

அதனால் இவர்களை பின்னுக்கு தள்ள வேண்டும் என்ற யோசனையில் பிரபாஸ் தந்திரமாக காய் நகர்த்திருக்கிறார். மேலும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதால் அதிக அளவில் பொருளாதார ரீதியாக பல சவால்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.

இந்த காரணத்தினால் படத்திற்கு எந்த இடையூறும் வரக்கூடாது என்பதற்காக அவரால் முடிந்தவரை பணம் கொடுத்து உதவி செய்து வருகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *