விஜயின் 68ஆவது படம் : ப்ரோமோஷனுக்காக விஜய் டிவி பிரபலத்தை தட்டி தூக்கிய வெங்கட்பிரபு!

விஜயின் 68ஆவது படம் :  ப்ரோமோஷனுக்காக விஜய் டிவி  பிரபலத்தை தட்டி தூக்கிய வெங்கட்பிரபு!
  • PublishedJune 3, 2023

விஜய் லியோ படத்தை முடித்த கையோடு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்போது வெங்கட் பிரபு இப்படத்தின் வேலைகளை தொடங்கி விட்டாராம். அதன்படி தளபதி 68 கதாநாயகி மற்றும் பிற நடிகர்,  நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் இறங்கி உள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக தளபதி 68 ப்ரோமோஷன் வீடியோக்களை பிக் பாஸ் பிரபலம் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் டிவியில் அதிக டிஆர்பி பெரும் நிகழ்ச்சி பிக் பாஸ் தான்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த போட்டியாளர்கள் வெள்ளி திரையில் கால் பதிக்கிறார்கள். அதன்படி கடந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி இப்போது தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்யின் பிரமோஷன் வீடியோக்களை இயக்கும் வாய்ப்பு மற்றொரு பிக் பாஸ் பிரபலத்திற்கு கிடைத்துள்ளது. அதன்படி விஜய்யின் தளபதி 68 ப்ரோமோஷன் வீடியோக்களை அபிஷேக் வேற லெவலில் இயக்க இருக்கிறாராம். இந்தச் செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *