சாமி பாடல்களை கூட விட்டுவைக்காத சில இசையமைப்பாளர்கள்!

சாமி பாடல்களை கூட விட்டுவைக்காத சில இசையமைப்பாளர்கள்!
  • PublishedApril 10, 2023

தமிழ் சினிமாவில் பழைய பாடல்களை ரீமேக் செய்யும் பழக்கம் அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. அந்தவகையில் சில இசையமைப்பாளர்கள் சாமி திரைப்படங்களில் இருந்த பாடல்களையும் கொப்பியடித்துள்ளனர். அப்படியான சில பாடல்களை இந்த பதவில் பார்க்கலாம்.

தேவா

பல இன்னிசை பாடல்களை கொடுத்த இவர் கந்த சஷ்டி கவசத்தை காப்பி அடித்து ஒரு பாடலுக்கு மெட்டு போட்டு இருக்கிறார். அதாவது சரத்குமார், ரோஜா நடிப்பில் வெளிவந்த சூரியன் படத்தில் 18 வயது என்ற ஒரு மார்க்கமான பாடல் வரும். அந்தப் பாடல் கந்த சஷ்டி கவச பாடலான சஷ்டியை நோக்க சரவண பவனார் என்ற பாடலின் காப்பிதான்.

ஸ்ரீகாந்த் தேவா

அப்பா வழியில் இவரும் கணபதி பாடலை காப்பியடித்து ஒரு படத்திற்கு மெட்டு போட்டு இருக்கிறார். அந்த வகையில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் வரும் சென்னை செந்தமிழ் என்ற பாடல் மகா கணபதி என்ற பாடலின் காப்பி தான்.

எஸ் ஏ ராஜ்குமார்
பல காதல் பாடல்களை கொடுத்த இவர் பெருமாளின் ஶ்ரீ ஶ்ரீனிவாசம் என்ற பாடலின் மெட்டை ஒரு படத்திற்கு பயன்படுத்தி உள்ளார். அதாவது முரளி,  லைலா நடிப்பில் வெளிவந்த காமராசு படத்தில் வரும் பாதி நிலா இன்று பௌர்ணமி ஆச்சு என்ற பாடல் பெருமாள் பாடலின் காப்பி தான்.

யுவன் சங்கர் ராஜா
இவர் பிரபலமான அம்மன் பாடலை ஒரு படத்தில் பயன்படுத்தி இருப்பார். அதாவது எல் ஆர் ஈஸ்வரியின் குரலில் பக்தி பரவசம் தரும் பாடல் தான் கற்பூர நாயகியே கனகவல்லி. இந்த பாட்டை யுவன் தாமிரபரணி படத்தில் வரும் கருப்பான கையாலே என்ன புடிச்சான் என்ற பாடலில் பயன்படுத்தியிருப்பார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *