சினிமாவில் பெரிதளவு பேசப்பட்ட சில பாடல்கள் : அரபிக் குத்தை முந்திய தனுஷ் பாடல்!

சினிமாவில் பெரிதளவு பேசப்பட்ட சில பாடல்கள் : அரபிக் குத்தை முந்திய தனுஷ் பாடல்!
  • PublishedMay 16, 2023

படங்களில் பாடல்களுக்கு என்று ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. படத்தில் கதை நல்லா இல்லை என்றாலும் பாடல்கள் மூலம் படம் பெயர் பெற்று விடுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர்களுக்கு ஹிட் கொடுக்கும் பாடலாகவும் அமைந்துவிடுகிறது.

அந்தவகையில் வெளியாகியப்பின் படங்களை விட அதிகளவு பேசப்பட்ட சில பாடல்களை இநத பதிவில் பார்க்கலாம்.

ஒய் திஸ் கொலவெறி: 2012ல் வெளிவந்த இப்பாடல் மக்களை கவர்ந்த ஒன்றாகும். இப்பாடல் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாவதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் இப்பாடல் 3.94 மில்லியன் வியூசை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

என்ஜாய் என்ஜாமி: சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் தான் என்ஜாய் என்ஜாமி. இப்பாடல் இயற்கையை போற்றும் விதமாக மக்கள் நெஞ்சில் நீங்காமல் நிலைத்து நின்றது.  இப்பாடல் 4.66 மில்லியன் வியூசை பெற்று பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

அரபிக் குத்து: 2022ல் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்திருப்பார். இதில் முக்கியமாக விஜய்யின் நடனம் கூடுதல் சிறப்பை பெற்று தந்தது. இவை 5.08 மில்லியன் வியூசை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

புட்டபொம்மா: அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே இடம்பெறும் இப்பாடல் ரசிகர்களை மயக்கும் விதமாக அமைந்தது. இப்பாடல் 8.32 மில்லியன் வியூசை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

ரவுடி பேபி: 2018ல் வெளிவந்த மாரி படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் நடனம் போட்டிக்கு போட்டியாக அமைந்திருக்கும்.  இந்த பாடல் தற்பொழுதுவரை 1.4 பில்லியன் வியூஸ் பெற்று முதல் இடத்தில் இருந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *