கமலின் நடிப்பில் வெளியான நாயகன் படம் உருவான கதை!

கமலின் நடிப்பில் வெளியான நாயகன் படம் உருவான கதை!
  • PublishedMay 16, 2023

உலக நாயகன் கமலின் நடிப்பில் வெளியான நாயகன் படத்தை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இப்படம் அந்நாட்களில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதாவது எழுத்தாளர் பாலகுமாரன்  மணிரத்தினம்  கமலஹாசன் ஆகியோர் நாயகன் கதை எழுதுவதற்காக மும்பை ஹோட்டலில் தங்கி இருந்தனர்.

அந்தச் சமயத்தில் கமலின் விலை உயர்ந்த கடிகாரம் காணாமல் போய் உள்ளது. மேலும் அந்த ஹோட்டல் முழுக்க தேடிப் பார்த்தும் கடிகாரம் கிடைக்கவில்லையாம்.

இதனால் கடைசியாக ஹோட்டல் நிர்வாகத்திடம் என்னுடைய விலை உயர்ந்த கடிகாரம் காணவில்லை என்பதை சொல்லி உள்ளனர்.

மேலும் அந்த நிர்வாகம் தாதாவை பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு கடிகாரம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். கடிகாரகத்திற்காக ஏன் அவரைப் பார்க்க வேண்டும் என முதலில் கமல் யோசித்துள்ளார்.

ஆனால் பிறகு போய் தான் பார்க்கலாம் என்று முடிவெடுத்து தாதாவை பார்க்கச் சென்றனர். மேலும் எதற்கு வந்தீர்கள் என்ற தாதா கேட்க கமல் கடிகார விஷயத்தைச் சொல்லாமல் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தான் வந்திருக்கிறேன் என்று கூறினார்.

அதன் பிறகு கடிகாரம் தொலைந்த விஷயத்தை கமல் கூறி உள்ளார். நாளைக்குள் உன் கையில் கடிகாரம் இருக்கும் என உறுதி அளித்துவிட்டு தாதா சென்றுவிட்டாராம். தாதாவை பற்றிய விஷயங்களை அவரது மனைவியிடம் கேட்டு தெரிந்துகொண்டு அசந்து போய் விட்டாராம் கமல்.

மேலும் ஹோட்டலுக்கு செல்லும்போது கமலின் கையில் கடிகாரமும் வந்து விட்டதாம். அந்த நொடியே கமல் முடிவு செய்துவிட்டாராம் இந்த தாதாவை பற்றி தான் படத்தை எடுக்க வேண்டும் என்று. இவ்வாறுதான் நாயகன் படம் உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *