சோழ சாம்ராஜியத்திற்காக வாள் சண்டை……………..இல்லை, இது குல்பி சண்டை : வைரலாகும் போட்டோஸ்!

சோழ சாம்ராஜியத்திற்காக வாள் சண்டை……………..இல்லை, இது குல்பி சண்டை : வைரலாகும் போட்டோஸ்!
  • PublishedApril 20, 2023

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் ப்ரமோஷன் பணிகளில் களமிறங்கியுள்ளனர்.

karth-shobitha

அந்த வகையில் விக்ரம், கார்த்தி,  ஜெயம் ரவி,  திரிஷா,  ஐஸ்வர்யா லட்சுமி,  சோபிதா உள்ளிட்ட அனைவரும் ஊர் ஊராக சென்று ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகின்றனர்.

அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் இப்போது சோஷியல் மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது. அதில் தற்போது படக்குழுவினர் அனைவரும் டெல்லிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது.

vikram-aishwarya-lakshmi

ஏனென்றால் அதில் சோழர்கள் அனைவரும் குல்பி ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிடுவது போல் போஸ் கொடுத்திருக்கின்றனர். அதை லைக்கா நிறுவனமும் தன் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு நாங்கள் எப்போதுமே கூல் என்று குறிப்பிட்டு இருக்கிறது.

trisha-cinemapettai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *