அமரன் படத்தை ஸ்பெஷலாக பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அமரன் படத்தை ஸ்பெஷலாக பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…
  • PublishedOctober 31, 2024

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படத்தை ஸ்பெஷலாக பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்திற்கும், படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்த படம் அமரன். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் 21ஆவது படமாக உருவான அமரன் தமிழ் உள்பட தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இன்று திரைக்கு வந்துள்ளது.

இதுவரையில் யாருமே எதிர்மறையாக விமர்சனம் கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

நண்பர் கலைஞானி கமல் ஹாசன் அவர்களது அன்பு அழைப்பை ஏற்று, நேற்று அமரன் திரைப்படம் பார்த்தேன்.

புத்தகங்களைப் போல் – திரைப்பட வடிவிலும் உண்மைக் கதைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு சேர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களது வீரத்தையும் அர்ப்பணிப்பையும் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜன் – திருமிகு. இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகியோரது பாத்திரங்களைத் தங்களது நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திய தம்பி சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! நாட்டைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கும் – நம் நினைவில் வாழும் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களுக்கும் Big Salute என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் பலரும் படம் பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *