புதிய படங்களை இணையத்தில் பதிவேற்றிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது..

புதிய படங்களை இணையத்தில் பதிவேற்றிய தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது..
  • PublishedJuly 29, 2024

புது திரைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வந்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் இணையத்தில் வெளியிட்ட படங்களால் தியேட்டர்களில் பெருமளவு வசூல் பாதிப்பாகவும், ஏராளமானவர் இலவசமாக இணையதளங்களில் பார்த்து விடுவதாகவும் பல குற்றச்சாட்டங்கள் வைக்கப்பட்டது.

அந்த வகையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மின்னாக இருக்கும் மதுரையை சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவரை கேரளா சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். இவரை விசாரித்த பொழுது ஒரு படத்திற்கு 5000 ரூபாய் கமிஷன் பெற்று இணையதளத்தில் புதிய திரைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது.

அத்துடன் முதல் நாளில் வரும் படத்தில் முதல் காட்சிகே சென்று தியேட்டர்களில் யாருக்கும் தெரியாமல் சிறிய கேமராவை வைத்து வீடியோ எடுத்திருக்கிறார். இதை கடந்த ஒன்றை ஆண்டுகளாக செய்து வந்து புதிய படங்களை பதிவேற்றம் செய்துள்ளதாக விசாரணையில் ஸ்டீபன் ராஜ் கூறியிருக்கிறார்.

அதாவது கேரளாவின் திருவனந்தபுரம் ஏரியஸ் தியேட்டரில் தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் ரெக்கார்டு செய்து கொண்டிருந்த பொழுது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு இந்த உண்மையை கண்டறியப்பட்டிருக்கிறது.

ரெண்டு வருஷமாக இப்படி கிட்டத்தட்ட இந்த வேலையை கமுக்கமாக பார்த்து வந்த ஸ்டீபன் ராஜ் தற்போது கையும் களவுமாக பிடிபட்டதால் ஒட்டுமொத்த சினிமாவும் பெருமூச்சுவிட்டு நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *