செப்டம்பரில் ஆரம்பமாகும் படப்பிடிப்பு – தளபதி 69 அப்டேட்…

செப்டம்பரில் ஆரம்பமாகும் படப்பிடிப்பு – தளபதி 69 அப்டேட்…
  • PublishedJuly 9, 2024

நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69 என கூறப்பட்டு வருகிறது. அவர் அரசியலில் முழுமையாக இறங்கவுள்ள காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகப்போவதாக தெரிவித்திருக்கின்றார்.

தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்கப்போகிறார் என்றும், இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என்றும் தகவல் வெளியானது. ஆனால், இதுவரை அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

அதே போல் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப்போகிறார் என்கின்றனர். ஆனால் அண்மையில் இடம்பெற்ற வைத்தியருடனான பிரச்சினை காரணமாக சமந்தாவிடமிருந்து இந்த வாய்ப்பு தூக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளிவந்துள்ள தகவலின்படி வருகிற செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும் என சொல்லப்படுகிறது.

மேலும் இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகும் என்றும் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *