வாணி போஜனின் அழகின் ரகசியம்.. இதையெல்லாம் தொடவே மாட்டாராம்… நீங்களும் ட்ரை பண்ணுங்க

வாணி போஜனின் அழகின் ரகசியம்.. இதையெல்லாம் தொடவே மாட்டாராம்… நீங்களும் ட்ரை பண்ணுங்க
  • PublishedJune 3, 2023

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு நடிக்க வந்தவர்களில் மிகவும் முக்கியமானவராக நடிகை வாணி போஜன் காணப்படுகிறார்.

நடிகை வாணி போஜன் சின்னத்திரையில் தெய்வமகள் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர். தெய்வமகள் தொடர் இவருக்கு ஏராளமான ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.

இந்தத் தொடர் இவருக்கு முதல் தொடர் என்றாலும் தன்னுடைய சிறப்பான நடிப்பால், அந்தக் கேரக்டரை பலப்படுத்தினார்.

தமிழில் ஓ மை கடவுளே என்ற படத்தில் இவரது அறிமுகம் அமைந்தது. இந்தப் படத்திலும் இவரது கேரக்டர் சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.

இதைத்தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது காட்சிகள் படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்டு, பின்பு யூடியூபில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

தொடர்ந்து படங்கள், வெப் தொடர்கள் என தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

ஜெய்யுடன் இவர் நடித்த ட்ரிப்ள்ஸ் என்ற வெப்தொடர், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இருவருக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக பேசப்பட்டது. இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் பேசப்பட்டது.

இவர் மலேசியா டூ அம்னீசியா, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மிரள், லவ் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து இவரது நடிப்பில் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ போன்ற படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. செங்களம், தமிழ் ராக்கர்ஸ் போன்ற வெப் சீரிஸ்களிலும் இவரது நடிப்பு வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது அழகு மற்றும் கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்கள் ஈர்க்கப்பட்டு வருகின்றனர்.

இவருடைய அடுத்தடுத்த கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடுத்து இன்ஸ்டாகிராமில் இவரை 24 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வெளிநாடுகளுக்கு செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் வாணி போஜன். தற்போது மாலைத்தீவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர், ஜிவி பிரகாஷ் ட்வீட் வாணி போஜன் அழகு இருக்க இருக்க மிகவும் அதிகமாகிக் கொண்டே போவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய அழகின் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் வாணி போஜன். தினமும் இளநீர் குடிக்கும் வழக்கத்தை அவர் ஏற்படுத்தியுள்ளாராம்.

மேலும் கோதுமை, மைதா, சர்க்கரை போன்ற பொருட்களை தொடுவதே இல்லை என்றும் கூறியுள்ளார். தான் குடிக்கும் ஜூஸ்களில் சர்க்கரை போடாமல் குடிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளாராம் வாணி போஜன்.

இதன்மூலம் தன்னுடைய முகம் வெள்ளையாக மாறுவதாகவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பகலை காட்டிலும் இரவில் ஸ்கின்கேர் செய்யாமல் தூங்க மாட்டாராம்.

இதையெல்லாம் பிராப்பராக செய்வதுதான் தன்னுடைய அழகின் ரகசியம் என்று கூறியுள்ளார் வாணி போஜன். வாணி போஜனின் அடுத்தடுத்த படங்கள், வெப் தொடர்கள் ரிலீசாகிவரும் நிலையில், அவர் முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் மாறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *