குறவர் சமுகத்தை சார்ந்த குடும்பத்தினர் மறுக்கப்பட்ட விவகாரம் : கண்டனம் வெளியீடு!

குறவர் சமுகத்தை சார்ந்த குடும்பத்தினர் மறுக்கப்பட்ட விவகாரம்  : கண்டனம் வெளியீடு!
  • PublishedMarch 31, 2023

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில்,  சென்னை கோயம்பேடு பகுதிக்கு அருகில் இருக்கும் ரோஹினி தியேட்டரில் இன்று காலை முதல்  காட்சி திரையிடப்பட்டது.

இதனை பார்ப்பதற்காக இரசிகர்களோடு ரசிகர்களாக குறவர் சமுகத்தை சார்ந்த குடும்பத்தினர் தங்களுக்கு பிள்ளைகளுடன் தியேட்டருக்குள் செல்ல முயன்றுள்ளனர். ஆனால் அவர்களிடம் டிக்கெட் இருந்தும் திரையரங்க ஊழியர்கள் டிக்கெட்டை வாங்க மறுத்துள்ளனர்.

இளைஞர் ஒருவர் ஒருவர் இதை தட்டிக்கேட்டு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.   இதனையடுத்து இந்த விவகாரம் பூதாகரமானது. பல பிரபலங்களும் தியேட்டர் ஊழியர்களின் குறித்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமைக்கு ஊழியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். குழந்தைகளுக்கு 2,  6, 8 மற்றும் 10 வயது இருப்பதாலும் படம் யுஏ சான்றிதழ் பெற்றதால் சட்டப்படி அவர்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என்று கூறியிருந்தனர்.

எவ்வாறாயினும் ஊழியர்களின் இந்த செயலுக்கு கண்டம் வெளியிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *