விஜய் சேதுபதியின் இடத்தைப் பிடித்த பிரபல நடிகர்!

விஜய் சேதுபதியின் இடத்தைப் பிடித்த பிரபல நடிகர்!
  • PublishedMarch 12, 2023

சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் விஜய் சேதுபதி. ஆரம்ப காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு திரை உலகிற்கு வந்தாலும் இன்று சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார்.

தமிழில் மட்டுமல்லாமல் தற்போது ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருடைய தனி சிறப்பு ஒரு வருடத்திற்கு 10, 12 படங்களில் கமிட்டாகி நடிப்பது தான்.

இதனை அடுத்து சமீபத்தில் வெளிவந்த படங்களில் கெஸ்ட் ரோல் மற்றும் வில்லன் ரோலிலும் நடித்து ஒரு மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார். ஆனால் இதுவே இவருக்கு பெரிய மைனஸ் ஆக அமைந்துவிட்டது.

அதனால் இவருடைய இடத்தை தற்போது ராகவா லாரன்ஸ் பிடித்துவிட்டார். ராகவா லாரன்ஸ் தற்போது இந்த வருடத்தில் மட்டும் 8 படங்களில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி ராகவாலாரன்ஸ் நடிப்பில், அடுத்த மாதத்தில் ரிலீசுக்கு தயாராகி உள்ள முதல் படம் ‘ருத்ரன்’. இதில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை கதிரேசன் என்பவர் இயக்கியுள்ளார்.

அடுத்ததாக ‘அதிகாரம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனை அடுத்து சந்திரமுகி 2 படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை பி வாசு இயக்குகிறார். பின்பு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் தம்பி எல்வினுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

அடுத்ததாக இவர் சொந்தமாக டைரக்ட் செய்ய போகும் காஞ்சனா 4. அதற்கு அடுத்து நயன்தாராவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். பின்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் இதனைத் தொடர்ந்து ஒரு பேய் படத்தில் சுந்தர் சி மற்றும் லாரன்ஸ் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள்.  இவ்வாறாக தற்போது விஜய் சேதுபதியின் இடத்தை ராகவாலாரன்ஸ் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *