கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்
  • PublishedMarch 5, 2024

கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு, அடுத்தக்கட்டமாக செர்பியாவில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

தற்போது இப்படம் குறித்த ஷாக்கிங் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி தக் லைஃப் திரைப்படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் விலகி உள்ளாராம். முதற்கட்ட தகவல்படி கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகி இருப்பதாக கூறப்படுகிறது.

துல்கர் சல்மான் கைவசம் சூர்யாவின் புறநாணூறு திரைப்படம் உள்ளது. அப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். தக் லைஃப் படத்திற்கு அதிக நாள் கால்ஷீட் ஒதுக்க முடியாத காரணத்தால் வேறு வழியின்றி அப்படத்தில் இருந்து விலகிவிட்டாராம் துல்கர்.

துல்கர் சல்மானுக்கு பதிலாக வேறு நடிகரை ஒப்பந்தம் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலில் துல்கர் சல்மான் நடிக்க இருந்த கேரக்டரில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது.

அவர் தேசிங்கு பெரியசாமியின் படத்தில் நடிக்க பிசியானதால் அவருக்கு பதிலாக துல்கர் சல்மானை கமிட் செய்தனர்.

ஆனால் தற்போது துல்கர் சல்மானும் அப்படத்தில் இருந்து விலகி இருப்பதால் அடுத்ததாக யார் அந்த வேடத்தில் நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *