90களிலேயே 100 கோடிக்கு மேல் வசூலாகி சாதனை படைத்த சூப்பர் ஸ்டாரின் படங்கள்!
தற்போதைய காலப்பகுதியில் 100 கோடி வசூல் சாதனை என்பது பெரிய விடயமல்ல. காரணம் தற்போது எடுக்கப்படும் படங்களின் பட்ஜட்டே 500 கோடி எனும்போது 100 கோடி வசூல் பெரிய சாதனை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் 90களில் அப்படியல்ல. இருப்பினும் அந்த காலப்பகுதியிலேயே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த சில திரைப்படங்கள் 100 கோடி வசூல் சாதனையை தாண்டியுள்ளது.
அப்படியான சில படங்களை இதில் பார்க்கலாம்.
முத்து: 1995 ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மீனா, ரகுவரன், ராதாரவி, செந்தில், வடிவேலு இணைந்து நடித்த படம் முத்து. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இதில் ரஜினி இரண்டு வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். தமிழில் மட்டுமல்ல இந்த படம் தெலுங்கு ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று 100 கோடி வசூல் செய்திருந்தது.
அருணாச்சலம்: 1997 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ரஜினியின் ஸ்டைல் மற்றும் ஆக்சன் போன்றவை சூப்பர் ஸ்டார் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படமும் திரையரங்கில் தாறுமாறாக ஓடி 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.
படையப்பா: 1999 ஆம் ஆண்டு கேஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன்இ ரஜினிகாந்த்இ சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படம் தான் படையப்பா. இந்த படம் 1996ல் வெளியான இந்தியன் படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
அண்ணாமலை: 1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிஇ குஷ்பூ இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படம் தான் அண்ணாமலை. இந்தப் படம் வெறும் 45 நாட்களில் மட்டுமே எடுக்கப்பட்டது. உலக அளவில் அண்ணாமலை திரைப்படத்திற்கு 4 மில்லியன் டாலர் வருவாயாக கிடைத்தது. இந்தப் படத்திற்கு திரையரங்குகளில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி 175 நாட்கள் வரை தியேட்டர்களில் ஓடி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.