‘ஹீரோயினுடன் படுத்து விட வேண்டும்” ஜீவா பட நடிகைக்கு நடந்த கொடுமை…
வெளிநாட்டில் ஜீவாவின் படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது எப்படியாவது அந்த ஹீரோயினுடன் படுத்து விட வேண்டும் என நினைத்த இயக்குநர் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு அழைத்துள்ளார்.
ஆனால், அந்த இளம் நடிகை அதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், காண்டான இயக்குநர் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட பாடல் காட்சியில் ஹீரோயினின் முகத்தையே காட்டாமல் படம் பிடித்ததாக பிஸ்மி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஆனால், அந்த இயக்குநரின் பெயரை வெளிப்படையாக பிஸ்மி சொல்லாமல் மறைத்து விட்டார். மதிக்கத்தக்க இயக்குநர் என்று மட்டும் சொல்லி விட்டு அவர் பண்ண படு மோசமான விஷயத்தையும் ஜீவா நடித்த படத்திலேயே இப்படியொரு அட்டூழியம் நடந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
அந்த ஹீரோயினை பேக் ஷாட்டில் மற்றும் முகம் தெரியாமல் லாங் ஷாட்டில் மட்டும் தான் அந்த பாடலில் இயக்குநர் பயன்படுத்தியிருப்பார் என்றும் இந்த விஷயத்தை வெளியே வரவிடாமல் படக்குழுவே மறைத்து விட்டனர்.
அதன் பின்னர் அந்த நடிகை அந்த இயக்குநர் படத்தில் பணியாற்றவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
சினிமாவில் உள்ள பல அழுக்கான விஷயங்கள் மன்சூர் அலி கான் மேட்டர் மூலமாக வெளியே வரும் என தெரிகிறது.