சோழர்களுக்கு போட்டியாக களமிறங்கிய பாண்டியர்கள்!

சோழர்களுக்கு போட்டியாக களமிறங்கிய பாண்டியர்கள்!
  • PublishedApril 21, 2023

தற்போது ரசிகர்களின் கவனம் வரலாற்று கதைகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதனாலேயே  பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது. அதை தொடர்ந்து இரண்டாம் பாகமும் தற்போது வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் அதற்கு போட்டியாக வெளிவந்துள்ள திரைப்படம் தான் யாத்திசை. தரணி ராசேந்திரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் சக்தி மித்ரன்இ குரு சோமசுந்தரம்இ ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மிகக் குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு பிரம்மாண்ட படைப்பை கொடுக்க முடியும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறது இப்படம்.

ஏற்கனவே இதன் ட்ரெய்லரை பார்த்து மிரண்டு போன பலரும் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என கூறி வந்தனர். அதனாலேயே இப்படம் சோசியல் மீடியாவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.  இன்று வெளியாகியுள்ள இந்த படம் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நிச்சயம் டப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *