சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் – சங்கீதா!

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் – சங்கீதா!
  • PublishedApril 21, 2023

அண்மைக்காலமாக நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும், தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியது.

அதேநேரம் அவர்கள் இவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இவை எல்லாவற்றுக்கும் கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்றுக் கூட கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு விஜயிற்கு நெருக்கமானவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள். அந்த வகையில் எல்லார் குடும்பத்திலும் இருப்பது போல விஜய் வீட்டிலும் சிறு பிரச்சனை இருப்பது உண்மைதான்.

அதை சரி செய்யும் முயற்சியில் தான் தளபதி இருக்கிறாராம். அதனாலேயே அவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

அது பழைய போட்டோவாக இருந்தாலும் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் அதன் மூலம் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

இதை தற்போது அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்கள் கூட உறுதிப்படுத்தி இருக்கிறது. அதாவது இப்போதும் விஜய்இ சங்கீதா இருவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்களாம்.

அதனால் விவாகரத்து என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என்று அவர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் பல மாதங்களாக காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருந்த ஒரு சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *